பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
பவானிசாகர்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும். இந்த அணை தண்ணீரின் மூலம் சுமார் 2½ லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் 30-ந் தேதி மாலை 4 மணியளவில் 105 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது.
உபரிநீர்
அணையின் பாதுகாப்பு கருதி செப்டம்பர் மாதம் இறுதி வரை அதிகபட்சமாக 102 அடிக்கு மேல் தேக்க முடியாது. அதனால் பவானி ஆற்றில் வினாடிக்கு 2,800 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 867 கன அடி தண்ணீர் வந்தது. பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும், உபரி நீராக வினாடிக்கு 2 ஆயிரத்து 280 கனஅடி என மொத்தம் பவானி ஆற்றில் வினாடிக்கு 2 ஆயிரத்து 780 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
வரத்து குறைவு
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக இருந்தது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,014 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடியும், உபரி நீராக வினாடிக்கு 440 கன அடியும் என மொத்தம் பவானி ஆற்றில் வினாடிக்கு 940 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story