பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை ஓட்டு வீடு இடிந்து விழுந்தது; முதியவர் உயிர் தப்பினார்
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. முதியவர் உயிர் தப்பினார்.
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. முதியவர் உயிர் தப்பினார்.
பர்கூர்
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. பர்கூர் அடுத்துள்ள சின்னசெங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கப்பன் (வயது 65). இவர் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். பலத்த மழை பெய்தபோது, ஓடுகள் நனைந்து உடைந்து விழ தொடங்கியது. உடனே அருகே வசிக்கும் சொக்கப்பனின் மகன் சிவா ஓடிவந்து தந்தையை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். அவர் சென்ற சில நிமிடங்களில் ஓட்டு வீடு அப்படியே இடிந்து விழுந்தது. இதனால் சொக்கப்பன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்தநிலையில் நேற்று காலை சேதமடைந்த வீட்டை பர்கூர் கிராம நிர்வாக அதிகாரி நேரில் பார்வையிட்டு சேதமதிப்பை ஆய்வு செய்தார்.
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் அருகே மேற்கு மலை தொடர்ச்சி மலைகளுக்கு இடையே வரட்டுப்பள்ளம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரம் நிற்காமல் கனமழை பெய்தது. 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வரட்டுப்பள்ளம், கும்பரவாணிப்பள்ளம், கல்லுப்பள்ளம் ஓடைகள் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு மழைநீர் வந்து சேர்ந்தது.
Related Tags :
Next Story