நூதனமுறையில் வாலிபரிடம் பணமோசடி


நூதனமுறையில் வாலிபரிடம் பணமோசடி
x
தினத்தந்தி 2 Sept 2021 2:19 AM IST (Updated: 2 Sept 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

நூதனமுறையில் வாலிபரிடம் பணமோசடி

மதுரை
உசிலம்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 31). இவர் அந்த பகுதியில் ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். சமூக வலைதளத்தில் எல்.இ.டி. டி.வி. விற்பனை செய்வது தொடர்பான ஒரு விளம்பரத்தை பார்த்து உள்ளார். அதனை பதிவிட்டுள்ளவர், தான் அமித்குமார் எனவும், ராணுவத்தில் வேலை செய்வதாக கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து ராஜபாண்டியன், அந்த டி.வி.யை வாங்குவதற்காக பல தவணையாக ரூ.15 ஆயிரம் செலுத்தி இருக்கிறார். ஆனால் அவருக்கு டி.வி. வரவில்லை. இதற்கிடையே, மீண்டும் பேசிய அமித்குமார் டி.வி.யை டெலிவரி செய்ய ரூ.11 ஆயிரத்து 550 அனுப்பி வைக்குமாறு கூறிஉள்ளார். இதுகுறித்து ராஜாபண்டியன் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story