ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
உசிலம்பட்டி
எழுமலை அருகே உள்ளது சீலநாயக்கன்பட்டி. இந்த ஊரில் உள்ள ஓடைமாற்று பாதைகளை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஓடை மற்றும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லூர், எழுமலை இன்ஸ்பெக்டர் காஞ்சனா தேவி ஆகியோர் தலைமையில் பேரையூர் துணை தாசில்தார் பிரேம்கிஷோர், சேடப்பட்டி ஆணையாளர் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணி, கிராம நிர்வாக அலுவலர் தங்கமணி ஆகியோர் முன்னிலையில் ஓடை மற்றும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story