மதுராந்தகம் எம்.எல்.ஏ. ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டரை பேட்டையில் இருந்து சித்திரகூடம் செல்லும் வழியில் தரைப்பாலம் பழுதடைந்து காணப்படுகிறது. அந்த பாலத்தை 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த பாலத்தின் வழியாக அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேலிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை ஏற்று மதுராந்தகம் எம்.எல்.ஏ. தரைப்பாலத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story