போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது


போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Sep 2021 2:48 PM GMT (Updated: 2021-09-02T20:18:36+05:30)

போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது

கோவை

கோவை நகரில் குனியமுத்தூர், போத்தனூர், உக்கடம், சிங்காநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து சிலர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறார்கள். 

இதை தடுக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி போதை மாத்திரை கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 


இந்த நிலையில் குறிச்சி குளம் அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அங்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துகொண்டிருந்த சல்மாநகரைச் சேர்ந்த நிசாருதீன் (வயது 23) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 

அவரிடம் இருந்து 40 போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story