சிறுவனை கத்திமுனையில் மிரட்டி 3 லட்சம் கொள்ளை


சிறுவனை கத்திமுனையில் மிரட்டி 3 லட்சம் கொள்ளை
x

சிறுவனை கத்திமுனையில் மிரட்டி 3 லட்சம் கொள்ளை

கோவை

ஆர்.எஸ்.புரத்தில் தொழில் அதிபர் வீட்டில் புகுந்து சிறுவனை கத்திமுனையில் மிரட்டி ரூ.3½ லட்சத்தை வாலிபர் கொள்ளையடித்துச் சென்றார்.

தொழில் அதிபர்

கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் வீதியை சேர்ந்தவர் ஜிதேந்தர் மேத்தா (வயது38). தொழில் அதிபர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் கோவை- மேட்டுப்பாளையம் ரோடு காமராஜர் நகர் பகுதியில் பிளைவுட் கடை நடத்தி வருகிறார். 

இவர் இரவில் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். வீட்டில் அவருடைய குடும்பத்தினர் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டனர். அவருடைய 10 வயது மகன் ரிஷப் மட்டும் தனியாக இருந்தான்.‌

கத்திமுனையில் மிரட்டல்

அப்போது அந்த வீட்டுக்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர், சிறுவனிடம் உங்கள் அப்பா கடையின் லெட்டர் பேடு வாங்கி வருமாறு கூறியதாக இந்தியில் கேட்டுள்ளார். உடனே சிறுவன் வீட்டில் லெட்டர் பேடு தேடி கொண்டிருந்தான். 

அப்போது வீட்டின் அறைக்குள் புகுந்த அந்த வாலிபர் மேஜைமீது கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்தார். 

உடனே சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சிறுவனின் கழுத்தில் வைத்து சத்தம் போடக்கூடாது. சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

ரூ.3½ லட்சம் கொள்ளை

பின்னர் அவர் பணக்கட்டுகளை அள்ளி ஒரு பையில் போட்டார். இதையடுத்து சிறுவனை ஒரு அறையில் தள்ளி பூட்டிவிட்டு அந்த வாலிபர் தப்பிச் சென்றார். 

இரவில் குடும்பத்தினர் வந்து பார்த்த போது சிறுவன் அறையில் பூட்டப்பட்டு கிடந்தான். 

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தனர். 

 உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த ரூ.3½ லட்சத்தை அந்த நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

தேடுதல் வேட்டை

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்து அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

ஜிதேந்தர் மேத்தா வீட்டில் பணம் இருப்பதை தெரிந்த வடமாநில வாலிபர்தான் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 அதன்அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


Next Story