காரில் 200 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது
காரில் 200 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது
கருமத்தம்பட்டி
கோவையை அடுத்த சூலூர் அருகே நீலம்பூர் எல் அண்டு டி சோதனைச் சாவடி அருகே நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சூலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கர்நாடக பதிவு எண் கொண்ட கார் ஒன்று வேகமாக வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது சட்டத்திற்கு புறம்பான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் காரில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே காரில் இருந்த 2 பேரிடமும் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் - இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள், ராஜஸ்தான் மாநிலம் சண்டபள்ளியை சேர்ந்த மகேந்திரா (26), கலான் பகுதியை சேர்ந்த அசோக் பிரஜா பால் (19) என்பதும்,
பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு குட்கா பொருட்களை கடத்தி கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கடத்தி வந்த 200 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story