மாமியாரை தாக்கிய தொழிலாளி கைது


மாமியாரை தாக்கிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 2 Sep 2021 3:05 PM GMT (Updated: 2021-09-02T20:35:47+05:30)

மாமியாரை தாக்கிய தொழிலாளி கைது

கருமத்தம்பட்டி

நாகப்பட்டினம் மாவட்டம் பழையனூரை சேர்ந்தவர் தையல்நாயகி (வயது48). இவர் கருமத்தம்பட்டி செந்தில்நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

 இவருடைய மூத்த மகள் வினிதா. இவருடைய கணவர் நேசமணி (34). இவர்கள் கிருஷ்ணாபுரம் பகுதியில் தங்கி உள்ளனர். நேசமணி கிரில் ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை மாமியார் வீட்டிற்கு நேசமணி சென்றார். 

அங்கு குடும்ப பிரச்சினை குறித்து தையல்நாயகியிடம் பேசிய போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நேசமணி, தையல்நாயகியை கல்லால் தாக்கி காயப்படுத்தினர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நேசமணியிடம் விசாரித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த நேசமணி அங்கு கிடந்த உடைந்த பாட்டிலை எடுத்து தன்உடலில் தானே குத்தி காயப்படுத்திக் கொண்டார்.

 உடனே அவரை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நேசமணியை கைது செய்தனர்.

Next Story