கார் மோதியதில் சிறுவன் பலி; 4 பேர் படுகாயம்


கார் மோதியதில் சிறுவன் பலி; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Sept 2021 1:02 AM IST (Updated: 3 Sept 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே கார் மோதியதில் சிறுவன் பலியானான். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே கார் மோதியதில் சிறுவன் பலியானான். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரையை சேர்ந்தவர்கள்

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மணிபால் மகன் விஜய் (வயது 17). மதுரை வண்டியூரை சேர்ந்த சுபாஷ் (18), அக்னீஸ்வரன்(22), மதுரை அண்ணாநகரை சேர்ந்த வீர மணிகண்டன் (22) விஜய் (22). இவர்கள் 5 பேரும் காரியாபட்டி அருகே உள்ள வீ.நாங்கூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் இருவரும் மதுரைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
 அப்போது வரும் வழியில் காரியாபட்டி வக்கணாங்குண்டு அருகே இவர்கள் மது குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டனர். செவல்பட்டி அருகே சென்ற போது விஜய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது அவர்கள் 2 பேரும் கீேழ விழுந்தனர்.

கார் மோதியது

இந்த நேரத்தில் பின்னால் வேகமாக மதுரையை நோக்கி வந்த அடையாளம் தெரியாத கார் இருவரது மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேைரயும் மீட்டு காரியாப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவன் விஜய் பரிதாபமாக இறந்தான். மற்ற 4 பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து காரியாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story