ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சாலை மறியல்
ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சாலை மறியல்
திருமங்கலம்
ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் மதுரை, பசுமலை, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவிகள் நேற்று முதல் தேர்வு எழுதி வருகின்றனர். நேற்று காலை தேர்வு தொடங்கும் முன் திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று காலத்தில் நேரடி தேர்வு நடத்துவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். திருமங்கலம் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ளாத மாணவிகள் தொடர்ந்து தேர்வை புறக்கணித்து அரை மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து மாணவிகள் தேர்வு எழுத சம்மதம் தெரிவித்து அறைக்கு சென்றனர்.
மாணவிகளின் சாலை மறியல் போராட்டத்தால் அங்கு சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story