பெண்கள் சாலை மறியல்
அடிப்படை வசதி கேட்டு பெண்கள் சாலை மறியல்
உசிலம்பட்டி
எழுமலை பேரரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி மற்றும் சாக்கடை, குடிநீர் வசதி செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் 6-வது வார்டு பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் எழுமலையில் உள்ள தேவர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த பேரூராட்சி நிர்வாக அலுவலர் ஜெயமாலு மற்றும் மற்றும் எழுமலை போலீசார் மறியலில் ஈடுபட்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் அடுத்தடுத்து வரும் நிதியில் உடனடியாக சாலை மற்றும் சாக்கடை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் எழுமலையில் உள்ள உசிலம்பட்டி-எம்.கல்லுப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story