பிளஸ்-2 மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது


பிளஸ்-2 மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2021 2:49 AM IST (Updated: 3 Sept 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.

ஈரோடு
ஈரோடு வெண்டிபாளையத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் கொல்லம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து கொல்லம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு 4 பேர் 2 ஸ்கூட்டர்களில் வந்தனர். அவர்கள் அந்த மாணவரிடம் செல்போன் கேட்டு தகராறு செய்தனர். அவர் செல்போனை கொடுக்க மறுத்ததால், அவர்கள் அந்த மாணவரை சோடா பாட்டிலால் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மாணவரை தாக்கியது 18 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story