ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் முகாம்: 22,630 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் நடந்த முகாமில் 22,630 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஈரோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 94 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 33 இடங்களிலும் என மொத்தம் 127 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. இதில் 22 ஆயிரத்து 630 பேருக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
வழக்கம்போல், பொதுமக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்றனர். முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் டோக்கன் பெற்றவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதுவரை தடுப்பூசி போடாமல் இருந்தால், தங்கள் பகுதியில் நடக்கும் முகாமை பயன்படுத்தி கொண்டு, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story