கோபி, கவுந்தப்பாடி பகுதியில் இந்து முன்னணியினர் ஆா்ப்பாட்டம்


கோபி, கவுந்தப்பாடி பகுதியில் இந்து முன்னணியினர் ஆா்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2021 3:05 AM IST (Updated: 3 Sept 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

கோபி, கவுந்தப்பாடி பகுதியில் இந்து முன்னணியினர் ஆா்ப்பாட்டம்

ஈரோடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். தற்போது கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாடுவதற்கும், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 
அரசின் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தெய்வத்திடம் முறையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி கோபி அருகே கல்லூரி பிரிவில் அமைந்து உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் அம்மனிடம் முறையிட்டு இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இந்து முன்னணியின் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணியின் கோபி நகர செயலாளர் நாகேந்திரன், லக்கம்பட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல் கவுந்தப்பாடி ராஜ ராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் அருகே ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
 ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் பி.பி.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இந்து இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் சபரி, நகர பொதுச்செயலாளர் ரங்கன், நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story