பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது
கோவை
திராவிடர் தமிழர் கட்சியினர் கையில் திருவோடு ஏந்தியவாறு கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது.
மக்கள் வரிப்பணத்தால் உருவான பொதுத்துறை நிறுவனங்களான, விமான நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்டவற் றை மத்திய அரசு தனியாருக்கு விற்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
பலர் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளது. அரசு வேலை வாய்ப்பு என்பதே இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.
எனவே இந்த பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. அந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story