புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது

கோவை வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது.
கோவை,
மத்திய அரசின் புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் 4 ஆண்டுக ளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு கோவை வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட வனசரக பகுதியில் புலிகள் இருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இதுதவிர சிறுத்தை, காட்டெருமை, யானைகள், கழுதைப்புலி, யானை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்களும் கோவை மாவட்ட வனப்பகுதியில் வசித்து வருகின்றன.
இந்தநிலையில் புலிகள் கணக்கெ டுப்பு தற்போது தொடங்கி உள்ளது
இது குறித்து கோவை மாவட்ட கூடுதல் வன அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது
வன அலுவலர்களுக்கு பயிற்சி
மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் அறிவுரையின்பேரில், மேட் டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம்,
போளுவாம்பட்டி, மதுக்கரை, கோவை உள்ளிட்ட வனச்சரக பகுதிக ளில் புலிகளை கணக்கெடுக்க வனவர்கள், வனக்காப்பாளர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை அறிந்த 110 இடங்களில் 220 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
ஒரே இடத்தில் எதிரும், புதிருமாக 2 கேமராக்கள் பொருத்தப்படுகின் றன.
இதன் மூலம் வனவிலங்களின் நடமாட்டம் துல்லியமாக பதிவா கும். இதன் மூலம் ஒரு வனவிலங்கு மற்றொரு இடத்தில் இருக்கும் காட்சி பதிவானால் அதை கழித்து விட்டு கணக்கிடப்படும்.
இன்று தொடக்கம்
ஏதாவது ஒரு கேமரா பழுதானால் பொருத்துவதற்கு தயாராக 30 கேமராக்கள் உள்ளன. மொத்தம் 45 நாட்கள் கண்காணிப்பு கேமராக்கள் வனப்பகுதியில் வைக்கப்பட்டு பதிவாகும் காட்சிகள் ஆய்வு செய்யப்படும்.
அதன் அடிப்படையில் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் கணக்கெடுப்பு பணி தொடங்கி விட்டது. கோவை உள்ளிட்ட வனப்பகுதிகளில் பயிற்சி முடித்த வனக்காப்பாளர்கள் மூலம் கணக்கெடுப்பு பணி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






