வால்பாறையில் விடிய விடிய சாரல் மழை
வால்பாறையில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள சோலையாறு அணை 6-வது நாளாக நிரம்பி வழிகிறது.
வால்பாறை
வால்பாறையில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள சோலையாறு அணை 6-வது நாளாக நிரம்பி வழிகிறது.
சாரல் மழை
மலைப்பிரதேசமான வால்பாறையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இரவு தொடங்கிய சாரல் மழை விடிய விடிய பெய்தது.
இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் மலைப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் நீரோடைகள், ஆறுகளில் தண்ணீர் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது.
நிரம்பி வழியும் சோலையாறு
பி.ஏ.பி. திட்டத்தின் முக்கியமான அணையாக சோலையாறு உள்ளது. 160 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி நிரம்பியது. தொடர்ந்து கடந்த 27-ந் தேதி வரை அணை முழு கொள்ளளவில் இருந்தது.
மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்து 158 அடி யாக மாறியது. இந்த நிலையில் மீண்டும் மழை அதிகரித்ததால், கடந்த 29-ந் தேதி இந்த அணை 2-வது முறையாக நிரம்பியது.
அன்று முதல் 6 நாட்களாக அணையின் நீர்மட்டம் 161 அடியை தாண்டியே இருந்து வருகிறது. அணையில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் சேடல் டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு சென்று வருகிறது.
மழையளவு
இதன் காரணமாக இந்த அணையை பார்க்க கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.
வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையளவு (மில்லி மீட்டர்) விவரம் வருமாறு:-
வால்பாறை 14 மி.மீ., மேல் நீராறு 22, கீழ் நீராறு 8, சோலையாறு 5, பரம்பிக்குளம் 12.
Related Tags :
Next Story