ஆயுள்தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வழக்கு


ஆயுள்தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 4 Sept 2021 1:34 AM IST (Updated: 4 Sept 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஆயுள்தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வழக்கில் சிறை அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை
ஆயுள்தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வழக்கில் சிறை அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
விடுதலை செய்ய மனு
சென்னையை சேர்ந்த வீரபாரதி, கொலை வழக்கில் கைதானார். இந்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தண்டனை, ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது. சென்னை புழல் சிறையில் இருந்த அவர், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அவர், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். 
அந்த மனுவில், 20 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறேன். என்னுடைய மனைவி, மகன் ஆகியோர் எனக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். சிறையில் நன்னடத்தை சான்றையும் பெற்றுள்ளேன். என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். எனவே என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
சிறை அதிகாரிகள் பதில் தர உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், இந்த மனு குறித்து சிறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story