ஓடும் லாரியில் ரெடிமேட் துணிகளை திருடிய 4 பேர் கைது


ஓடும் லாரியில் ரெடிமேட் துணிகளை  திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2021 1:34 AM IST (Updated: 4 Sept 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் லாரியில் ரெடிமேட் துணிகளை திருடிய 4 பேர் கைது

பேரையூர்,
டி.கல்லுப்பட்டி அருகே ஓடும் லாரியில் ரெடிமேட் துணிகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
துணிகள் திருட்டு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள வலையபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 39). இவர் லாரி டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று லாரியில் மதுரையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு தென்காசி சென்று லோடு இறக்குவதற்காக டி. கல்லுப்பட்டி வழியாக செல்லும்போது அங்கு டீ குடிப்பதற்காக லாரியில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது லாரியின் பின்னால் இருந்து சிலர் இறங்கி அங்கு தயாராக இருந்த மினி வேன் ஒன்றில் ஏறி தப்பி ஓடினார்கள். 
உடனே லாரி டிரைவர் வேல்முருகன் லாரியில் ஏறி பார்த்த போது லாரியில் இருந்த தார்ப்பாய் கிழிக்கப்பட்டு அதிலிருந்த ரூ.47 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் துணிகள் திருட்டு போயிருந்தது. மேலும் திருடிய ரெடிமேட் துணிகளை மினி வேனில் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.
4 பேர் கைது
இந்தநிலையில் டி.கல்லுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்- இன்ஸ்பெக்டர் முகம்மது நூர்தீன் மற்றும் போலீசார் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூர் சாலை வளைவில் ரோந்து சென்றனர். அப்போது மினி வேன் ஒன்று வந்தது, போலீசார் மினி வேனை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின்னாக பேசினார்கள். உடனே போலீசார் வேனில் இருந்தவர்களை டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். 
விசாரணையில், உசிலம்பட்டி தாலுகா கொடிக்குளம் அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்த சந்திரசேகர்(27), விஜி என்ற விஜயன்(35) நடுமுதலை குளத்தை சேர்ந்த பாரத்(31), சதீஸ்(22) ஆகியோர் ஓடும் லாரியில் துணிகரமாக ஏறி ரெடிமேட் துணிகளை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் மினி வேன் மற்றும் ரெடிமேட் துணிகளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story