தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2021 1:35 AM IST (Updated: 4 Sept 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

மதுரை
மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் உசிலம்பட்டி உட்கோட்டத்தில் உள்ள தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், உசிலம்பட்டி நகர் போலீசில் பதிவு செய்யப்பட்ட 4 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(வயது 30) என்பவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் 6 கணினிகள் மற்றும் கணினி உதிரிபாகங்கள், கேமரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுவாக பாராட்டினார்.

Next Story