விலை உயர்ந்ததால் மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்
விலை உயர்ந்ததால் மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஈரோடு
விலை உயர்ந்ததால் மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மஞ்சள்
மஞ்சள் மாநகரமாக ஈரோடு திகழுகிறது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யும் மஞ்சளுக்கு தனிச்சிறப்பு உண்டு. காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதியில் தொடர்ந்து 10 மாதங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால், அங்கு பிரதான பயிராக மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு மஞ்சளுக்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காமல் இருந்து வந்தது. இதன் காரணமாக சாகுபடி பரப்பளவும் குறைய தொடங்கியது.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் மஞ்சளின் விலை உயர்ந்தது. ஒரு குவிண்டால் சுமார் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. இதன் காரணமாக விவசாயிகள் பல ஆண்டுகளாக இருப்பில் வைத்திருந்த மஞ்சளை விற்பனை செய்தனர். மேலும், நடப்பு ஆண்டில் விவசாயிகளும் மஞ்சள் சாகுபடியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
விலை உயா்வு
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி கடந்த ஆண்டு 6 ஆயிரம் ஏக்கருக்கும் குறைவாக இருந்து வந்தது. இந்தநிலையில் விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு 6 ஆயிரத்து 800 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் மஞ்சளை சாகுபடி செய்து உள்ளனர். தற்போது விலை குறைவாக காணப்பட்டாலும், மீண்டும் விலை உயருவதற்கு வாய்ப்பு உள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளதால், வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. எனவே நீர்வளம் இருப்பதால், மஞ்சள் சாகுபடி பரப்பளவு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story