காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தொழிலாளி அடித்துக்கொலை


காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 4 Sept 2021 3:26 AM IST (Updated: 4 Sept 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

காசிமேடு மீ்ன்பிடி துறைமுகத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

திருவொற்றியூர்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 42). இவர், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சாலையோரம் தங்கி, மீன் கூடைகள் தூக்கும் வேலை பார்த்து வந்தார்.கடந்த 29-ந் தேதி இரவு மர்மநபர் ஒருவர் கமலக்கண்ணனை ஓட ஓட விரட்டி கட்டையால் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

உயிரிழந்தார்

இந்தநிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அடிதடி வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்த காசிமேடு மீன்பிடித்துறைமுகம் போலீசார், பின்னர் இதை கொலை வழக்காக மாற்றி, தப்பி ஓடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

மர்ம ஆசாமி பிடிபட்டால்தான் கமலக்கண்ணன் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story