வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கோவை
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று காலை வந்தார்.
அவர், திடீரென்று கலெக்டர் அலுவ லகம் முன்பு தற்கொலை செய்யப் போவதாக கூறி பாட்டிலில் கொண்டு வந்த டீசலை உடலில் ஊற்ற முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடேன அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். மேலும் அவரிடம் இருந்த டீசல் கேனை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த குமாரசாமி (வயது 28) என்பதும்,
கோவை யை அடுத்தபெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள என்ஜினீயரிங் நிறுவ னத்தில் கடந்த ஒரு ஆண்டாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.மேலும் அவருக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்பட வில்லை.
இது பற்றி அவர், அந்த நிறுவனத்தினரிடம் பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் செலவுக்கு பணமின்றி அவர் தவித்ததால் தற்கொலைக்கு முயன்றதாக கூறி உள்ளார்.
இதையடுத்து குமாரசாமியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
Related Tags :
Next Story