மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது


மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 4 Sept 2021 10:20 PM IST (Updated: 4 Sept 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

பேரூர்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நகைப்பட்டறை தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது 

நகைப்பட்டறை தொழிலாளி

கோவையை அடுத்த வடவள்ளி பகுதியில் 40 வயதான நகைப்பட்ட றை தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரு டைய மனைவி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே அவர் தினசரி மருந்து, மாத்திரை சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் அந்த தொழிலாளி, தனது 17 மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 

மேலும் அவர், தனது மகளுக்கு  தொந்தரவு கொடுப்பது அதிகரித்தது. மேலும் தனது ஆசைக்கு இணங்கா விட்டாலும், தனது அத்துமீறலை வெளியே சொன்னாலும்  கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டி உள்ளார்.

போக்சோவில் கைது

இது பற்றி அந்த பெண், தனது தாயிடம் கூறி அழுதார். இது குறித்த புகாரின் பேரில் பேரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி, நகைப்பட்டறை தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். 

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நகைப்பட்டறை தொழிலாளி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

அதன் பிறகு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவை வடவள்ளி பகுதிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். 

அவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தனது மனைவிக்கு தெரியாமல், மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. 


Next Story