100 சதவீத காப்பீடு செய்த கிராம மக்கள்


100 சதவீத காப்பீடு செய்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 5 Sept 2021 1:16 AM IST (Updated: 5 Sept 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீத காப்பீடு செய்த கிராம மக்கள்

வாடிப்பட்டி
வாடிப்பட்டி யூனியன் ஆண்டிபட்டி ஊராட்சியை சேர்ந்த சின்னமநாயக்கன்பட்டி, தும்பிச்சம்பட்டி கிராமங்களில் வசித்து வரும் அனைத்து குடும்பத்தினரும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டத்தில் முழுமையாக சேர்ந்துள்ளதால் முதன்முறையாக 100 சதவீதம் காப்பீடு செய்யப்பட்ட ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டல யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் ஆண்டிபட்டி ஊராட்சியை தத்தெடுத்து அந்த கிராமத்தில் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் பெற்றிட விழிப்புணர்வு பிரசாரம் செய்து அந்த கிராமத்தில் அனைவரையும் சேர்க்கப்பட்டு 100 சதவீதம் நிறைவு செய்யப்பட்டது. 
தனிநபர், குடும்பம், கிராமம் பாதுகாப்பினை கருதி அனைத்து மக்களும் ஒற்றுமையாக இத்திட்டத்தில் இணைத்ததற்கு பாராட்டும் விழா நேற்று ஆண்டிபட்டி மந்தை திடலில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கி காப்பீட்டாளர்களை பாராட்டி பரிசு வழங்கினார். வங்கி மண்டல மேலாளர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி வரவேற்றார். இந்த விழாவில் சின்னமநாயக்கன்பட்டியில் அடல்பென்ஷன் யோஜனா திட்டத்தில் 193, பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமாயோஜனா திட்டத்தில் 288, பிரதம மந்திரி சுரஷா பீமாயோஜனா திட்டத்தில் 455, தும்பிச்சம்பட்டியில் அடல்பென்ஷன் யோஜனா திட்டத்தில் 64, பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமாயோஜனா திட்டத்தில் 209, பிரதம மந்திரி சுரஷா பீமாயோஜனா திட்டத்தில் 129 ஆகிய திட்டங்களில் சேர்க்கப்பட்ட பயனாளிகளுக்கு சான்றுகளை வழங்கினார். மேலும் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பாம்பு கடித்து இறந்த ராமசாமி மனைவி சிங்காரியிடம் ரூ.2 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. விழாவில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ராமசந்திரன், தாசில்தார் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய ஆணையர்கள் ரத்தினகலாவதி, பாண்டியன், வங்கி மேலாளர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story