அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து


அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து
x
தினத்தந்தி 5 Sept 2021 1:16 AM IST (Updated: 5 Sept 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து-தந்தை-மகன் படுகாயம்

கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே உள்ள வலைச்சேரிபட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் வீட்டின் அருகே சிமெண்ட் சீட்டால் ஆன செட்டில் அரசு அனுமதியின்றி பேன்சி ரக வெடி தயாரித்துள்ளார். அப்போது அவரது மகன் லோகநாதன்(18) உடன் இருந்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. வெடி விபத்தில்  முருகன், அவரது மகன் லோகநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் அந்த சிெமண்டு செட் கூடாரமும் சேதமடைந்தது. தகவல் அறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். உடன் வெடி விபத்து சம்பவம் குறித்து கியூ பிரிவு போலீசார், தடவியல் நிபுணர்கள், உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொட்டாம்பட்டி போலீசார்  வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story