சிவகாசி,
திருத்தங்கல் நகராட்சி நிர்வாகம் சார்பில் திருத்தங்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எஸ்.என்.புரம் பகுதியில் இயங்கி வரும் 3 நிறுவனங்களில் தொழிலாளர்கள் முககவசம் அணியாமல் பணியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த 3 நிறுவனங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் நகராட்சி சுகாதார அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் ஈடுபட்டனர்.