ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
x
தினத்தந்தி 4 Sep 2021 8:54 PM GMT (Updated: 2021-09-05T02:24:08+05:30)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தொற்றுக்கு 2 போ் பலியானாா்கள்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 125 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 ஆயிரத்து 896 ஆக உயர்ந்தது. இதில் 96 ஆயிரத்து 944 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். நேற்று மட்டும் 134 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தார்கள்.   தற்போது 1,292 பேர் கொரோனாவுக்கு     சிகிச்சை    பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். இதில் 49 வயது ஆண், 52 வயது ஆண் ஆகியோர் நேற்று முன்தினம் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு மொத்த பலி எண்ணிக்கை 660 ஆக உயர்ந்தது.

Next Story