ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நடமாடிய சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்


ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நடமாடிய சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்
x
தினத்தந்தி 5 Sept 2021 2:29 AM IST (Updated: 5 Sept 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் சிறுத்தை நடமாடியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள்.

தாளவாடி
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் சிறுத்தை நடமாடியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். 
சாலையோரம் சிறுத்தை
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக செல்லும் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். 
இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் அருகே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். 
‘செல்பி’ கூடாது
மைசூரு நெடுஞ்சாலையில் காரில் சென்ற சிலர் சிறுத்தை நடமாடுவதை தங்களுடைய செல்போனில் படம் பிடித்தார்கள். சிறிது நேரத்தில் சிறுத்தை அடர்ந்த காட்டு பகுதிக்குள் ஓடிவிட்டது.
இதுபற்றி ஆசனூர் வனத்துறையினர் கூறும்போது, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் நடமாடினால் அதன் அருகே சென்று வாகனங்களை நிறுத்தவேண்டாம். செல்போனில் படம் பிடிக்க வேண்டாம். ‘செல்பி’ எடுக்க கூடாது. ஏனென்றால் அவைகள் திடீரென தாக்க கூடும். எனவே வனச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்கள். 

Next Story