சத்தியமங்கலம் அருகே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை; உடல் நலக்குறைவால் விபரீத முடிவு


சத்தியமங்கலம் அருகே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை; உடல் நலக்குறைவால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 4 Sep 2021 9:03 PM GMT (Updated: 2021-09-05T02:33:39+05:30)

சத்தியமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு, போலீஸ் ஏட்டு மனைவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

புஞ்சைபுளியம்பட்டி
சத்தியமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு, போலீஸ் ஏட்டு மனைவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலீஸ் ஏட்டு மனைவி
சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவர் ஆசனூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். இவருடைய மனைவி தாமரைச்செல்வி (வயது 47). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 
தாமரைச்செல்வி கடந்த 2 ஆண்டுகளாக முடக்குவாதத்தால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. எந்த வேலையும் செய்ய முடியவில்லையே என்று மனமுடைந்து காணப்பட்டார். 
பிளேடால் கழுத்தை..
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் தாமரைச்செல்வியின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் சந்திரமோகன் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தாமரைச்செல்வி தனக்குத்தானே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். 
உடனே சந்திரமோகன் மனைவியை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். 
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story