பவானிசாகர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
பவானிசாகர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கடத்தூர்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கொடிவேரி அணையில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடையானது 5-வது நாளாக தொடர்கிறது. ஆனாலும் தகவலறியாமல் சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகிறார்கள். பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். கொடிவேரி அணை பகுதியில் உள்ள மீன் கடைகளை திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அணையின் வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story