சிவபெருமானுக்கு தங்ககவசம் அணிவிப்பு


சிவபெருமானுக்கு தங்ககவசம் அணிவிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2021 2:57 AM IST (Updated: 5 Sept 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

சிவபெருமானுக்கு தங்ககவசம் அணிவிப்பு

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் திறந்தவெளியில் பால் சுனை கண்ட சிவபெருமான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆவணி மாதத்தின் சனி மகாபிரதோஷம் நடந்தது. இதனையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், புனிதநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து சுவாமிக்கு "தங்ககவசம்" அணிவிக்கப்பட்டு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம், தீபாராதனை நடந்தது. இதேபோல திருப்பரங்குன்றம் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோவிலில் உள்ள காசிவிசுவநாதர் சன்னதியில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
பாலமேட்டில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். இதைபோல காஞ்சரம்பேட்டையை அடுத்த பாரைபட்டியில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. 
மதுரை சூர்யாநகர் முத்தப்ப நாராயணர் கோவில், கொடிக்குளம் அமிர்தகடேஸ்வரர் கோவில்களில் பிரதோஷ பூஜை நடந்தது..

Next Story