பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு


பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு
x
தினத்தந்தி 5 Sept 2021 3:10 AM IST (Updated: 5 Sept 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. இந்த அணை தண்ணீரின் மூலம் மொத்தம் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாகும். 
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், கடந்த மாதம் 30-ந் தேதி மாலை 4 மணியளவில் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு விதிப்படி செப்டம்பர் மாதம் இறுதி வரை அதிகபட்சமாக 102 அடிக்கு மேல் தேக்க முடியாது என்பதால் பவானி ஆற்றில் வினாடிக்கு 2,800 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. 
திறப்பு குறைப்பு
இந்த நிலையில் நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 4,883 கன அடி தண்ணீர் வந்தது. பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசனத்திற்கு வினாடிக்கு 422 கன அடி தண்ணீரும், உபரி நீராக வினாடிக்கு 4,368 கன அடி தண்ணீரும் என மொத்தம் பவானி ஆற்றில் வினாடிக்கு 4,790 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 
நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 826 கன அடியாக குறைந்தது.  இதனால் திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டது.  அதாவது பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசனத்திற்கு வினாடிக்கு 403 கன அடி தண்ணீரும், உபரி நீராக வினாடிக்கு 347 கன அடி தண்ணீரும் என மொத்தம் பவானி ஆற்றில் வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Next Story