ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது
x
தினத்தந்தி 5 Sept 2021 3:31 AM IST (Updated: 5 Sept 2021 3:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
நல்லாசிரியர் விருது
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுடன் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட, மாநில அளவிலான குழுக்களை பள்ளிக்கல்வித்துறை நியமித்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் உள்பட மாநிலம் முழுவதும் 385 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
11 ஆசிரியர்கள் தேர்வு
அதன்படி சித்தோடு அரசு மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ரத்தினசபாபதி, குட்டிபாளையம் அரசு உயர்நிலை பள்ளிக்கூட ஆசிரியர் சந்திரசேகரன், மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட ஆசிரியர் மணிகண்டன், பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட ஆசிரியர் பாலகிருஷ்ணன், ஈரோடு ஈ.கே.எம் அப்துல் கனி மதரசா இஸ்லாமிய உயர்நிலை பள்ளிக்கூட ஆசிரியர் சேட்டு மதார்ஸா, சிறுகளஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கல்யாணி, காடகநல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியை நம்பிக்கை மேரி, ஏழுர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூட ஆசிரியை சுமதி, குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூட ஆசிரியர் ரஞ்சித் குமார், அவ்வையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூட ஆசிரியை தீபலட்சுமி, பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட ஆசிரியர் ரவிக்குமார் ஆகிய 11 பேர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு புதுமையான கற்பித்தல், கல்விக்கான செயலிகள் வடிவமைத்தல், பள்ளிக்கூடங்களில் சுற்றுச்சூழல் மேம்படுத்துதல், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story