ஆழியாறு தடுப்பணையில் போலீசார் கண்காணிப்பு


ஆழியாறு தடுப்பணையில் போலீசார் கண்காணிப்பு
x
ஆழியாறு தடுப்பணையில் போலீசார் கண்காணிப்பு
தினத்தந்தி 5 Sept 2021 8:43 PM IST (Updated: 5 Sept 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு தடுப்பணையில் போலீசார் கண்காணிப்பு

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மற்றும் பூங்கா சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. இங்கு விடுமுறை நாட்களில் கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 


இதனால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஆழியாறு அணை மற்றும் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளித்தனர். ஆனால் போலீசாரும், பொதுப்பணித் துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதுகுறித்து'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று ஆழியார் போலீசார் தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள ஆழியாறு அணை தொடர் மழையின் காரணமாக நிரம்பி விட்டது. தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. 

இதனால் அணையில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

அணைக்கு எதிரே உள்ள பள்ளிவிலங்கால் தடுப்பணையில் தடையை மீறி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக ஆழியார் போலீசார் மூலம் அணைக்கட்டு பகுதியில் குளிக்க தடை விதித்து எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

 தடுப்பணையில் பலர் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். எனவே சுற்றுலா பயணிகள் தடை உத்தரவை மீறி தடுப்பணையில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். இதையும் மீறி குளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story