18 பேருக்கு கொரோனா தொற்று
18 பேருக்கு கொரோனா தொற்று
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் நேற்று 3 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் ஒருவருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 5 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 4 பேருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 2 பேருக்கும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 3 பேருக்கும் சேர்த்து பொள்ளாச்சி பகுதியில் மொத்தம் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இதுவரைக்கும் 12,600 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 12 ஆயிரம் 225 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 116 பேர் இறந்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story