கன்டெய்னர் வாடகை கட்டணம் உயர்வு


கன்டெய்னர் வாடகை கட்டணம் உயர்வு
x
தினத்தந்தி 5 Sep 2021 5:44 PM GMT (Updated: 5 Sep 2021 5:44 PM GMT)

கன்டெய்னர் வாடகை கட்டணம் உயர்வு

கோவை

கப்பல்களில் கொண்டு செல்ல பயன்படும் கன்டெய்னர் வாடகை கட்டணம் பல மடங்கு அதிகரித்து உள்ளதால் கோவை ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருட்கள் ஏற்றுமதி 

கோவை மாவட்டத்தில் ஜவுளி மற்றும் மோட்டார் எந்திரங்கள், பம்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படு கின்றன. அவை கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு தூத்துக்குடி மற்றும் கொச்சியில் உள்ள துறைமுகங்கள் மூலம்  வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.  

இந்த நிலையில் தற்போது கன்டெய்னர் வாடகை கட்டணம் 4 மடங்கு உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக கோவையை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இது குறித்து தென்னிந்திய என்ஜினீயரிங் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக் கூறியதாவது:-

கன்டெய்னர் தட்டுப்பாடு 

வெளிநாடுகளுக்கு கன்டெய்னர்கள் மூலம்தான் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக அந்த கன்டெய்னர்கள் திரும்பி வருவது இல்லை. இதன் காரணமாக கன்டெய்னர்களுக்கு தட்டுப்பாடு அதிகமாக நிலவி வருகிறது.  

இதன் காரணமாக அதன் வாடகை கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது. சில நேரங்களில் கன்டெய்னர் வாடகைக்கு கிடைப்பது இல்லை. இதனால் கோவை மாவட்டத்தில் இருந்து பல்வேறு என்ஜினீயரிங் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடும் பாதிப்பு 

ஏற்றுமதியை அதிகரிக்க தொழில்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை பிரதமர் மோடி அளித்து வருகிறார். இந்த நிலையில் கன்டெய்னர்களுக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்கள் ஏற்றுமதி தொழில் கடுமையாக பாதித்து உள்ளது. 

மேலும் இது தொடர்பாக பல்வேறு தொழில் துறையினரின் கருத்துக்களை பெற்றுக்கொண்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு கோரிக்கை அளிக்க முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story