சுவேந்து அதிகாரிக்கு சிஐடி போலீஸ் சம்மன்


சுவேந்து அதிகாரிக்கு சிஐடி போலீஸ் சம்மன்
x
தினத்தந்தி 5 Sep 2021 9:08 PM GMT (Updated: 5 Sep 2021 9:41 PM GMT)

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கு அம்மாநில சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கொல்கத்தா, 

 கடந்த 2018-ல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியாக சுவேந்து அதிகாரி இருந்த போது, அவரது பாதுகாப்பு அதிகாரியான மாநில ஆயுதப் படை போலீஸ் சுப்ரதா சக்ரவர்த்தி தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென சக்ரவர்த்தியின் மனைவி புகார் செய்தார். 

இது தொடர்பாக, மாநில சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  11 போலீசார் உள்பட 15 பேரிடம் சிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்  பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு  நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அம்மாநில சிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் அக்கட்சி எம்பியுமான அபிஷேக் பானர்ஜி, அவரின் மனைவி ருஜிரா பானர்ஜி ஆகியோரை நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்த நிலையில், சுவேந்துக்கு மாநில சிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. 


Next Story