விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை


விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 6 Sept 2021 2:39 AM IST (Updated: 6 Sept 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே செல்போன் பார்த்ததை தாயார் கண்டித்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே செல்போன் பார்த்ததை தாயார் கண்டித்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தாயார் கண்டிப்பு

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் காரைக்குடிபட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். விவசாயி. இவருடைய மகள் பிரசன்னிதா(வயது 19). மேலூரில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வந்தார்.
 இந்த நிலையில் மாணவி வீட்டு வேலை செய்யாமல் அதிக நேரம் செல்போன் பார்த்ததாக தெரிகிறது. இதை அவரது தாயார் தேவி கண்டித்தார். இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டு உள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரசன்னிதா எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரை பெற்றோர், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story