கோவையில் அரசு பஸ் ஜப்தி


கோவையில் அரசு பஸ் ஜப்தி
x
கோவையில் அரசு பஸ் ஜப்தி
தினத்தந்தி 6 Sept 2021 10:20 PM IST (Updated: 6 Sept 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் அரசு பஸ் ஜப்தி

கோவை

கோவை ஆலாந்துறை அருகே கிளியகவுண்டன்பாளையத்தை சேர்ந்த வர் ராஜா. இவர், கடந்த 23.10.2012 அன்று தனது மோட்டார் சைக்கிளில் தொண்டாமுத்தூரில் இருந்து பூளுவாம்பட்டியை நோக்கி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் ராஜா பரிதாபமாக இறந்தார். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 


ராஜா இறந்ததால், இழப்பீடு வழங்க கோரி அவருடைய குடும்பத்தை சேர்ந்த சுகந்தி, சிங்கராஜ், ரகுபதி ஆகியோர் மோட்டார் வாகன விபத்து விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்து இழப்பீடாக ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்தை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. 


ஆனால் அந்த தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வில்லை. எனவே நிறைவேற்றக்கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்து, வட்டியுடன் சேர்த்து ரூ.26 லட்சத்து 91 ஆயிரத்தை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. 

அதையும் அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை. எனவே அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று 11-டி அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்து  நிறுத்தினர்.

இதேபோல் மற்றொரு வழக்கில் இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவின்பேரில், காந்திபுரம் மத்திய பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சேலம் கோட்ட அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றனர். 

ஆனால் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் உறுதி அளித்த னர். இதனால் கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி வந்தனர்.

Next Story