பேசும் கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை


பேசும் கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 Sep 2021 8:30 PM GMT (Updated: 6 Sep 2021 8:30 PM GMT)

பேசும் கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை

அலங்காநல்லூர்
காஞ்சரம்பேட்டை அருகே பாரைப்பட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சுவாமிக்கு தீர்த்த அபிஷேகமும், சம்மங்கி, ரோஜா, மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட 7 வகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. அங்குள்ள புதிய மண்டப வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பேசும் கன்னிமார் சுவாமிக்கு கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைத்து, அணையா விளக்குகள் ஏற்றப்பட்டு உலக மக்கள் நன்மைக்காகவும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story