விவசாயியை தாக்கிய 5 பேர் சிக்கினர்


விவசாயியை தாக்கிய 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 7 Sept 2021 2:00 AM IST (Updated: 7 Sept 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியை தாக்கிய 5 பேர் சிக்கினர்

அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியை சேர்ந்த 3 வயது சிறுவன் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக கொய்யாபழம் ஏற்றி வந்த மினி சரக்கு வாகனம் மோதியதில் காயம் அடைந்தான். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் சரக்கு வாகனத்தில் வந்த டிரைவரையும், கொய்யாபழம் ஏற்றிவந்த முடுவார்பட்டியை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் (45) என்பவரையும் தாக்கினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் விவசாயியை தாக்கிய மகாராஜன்(38) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேன் டிரைவர் ஜெகதீசன் (28) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story