ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கைது


ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கைது
x
தினத்தந்தி 7 Sept 2021 2:00 AM IST (Updated: 7 Sept 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

தேர்வுகளை ஆன்லைன் மூலம் வைக்கக் கோரியும், மதிப்பெண்கள் உரிய முறையில் வழங்க வேண்டும் எனக் கூறியும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம்
தேர்வுகளை ஆன்லைன் மூலம் வைக்கக் கோரியும், மதிப்பெண்கள் உரிய முறையில் வழங்க வேண்டும் எனக் கூறியும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை போலீசார் கைது செய்தனர்.
தேர்வுகள் புறக்கணிப்பு
மதுரை மாவட்டத்தில் 6 ஆசிரியர் பட்டய பயிற்சி கல்லூரிகள் உள்ளன. இங்கு மாணவிகளுக்கு தற்போது மதுரை, பசுமலை, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வுகளை புறக்கணித்து தேர்வு எழுதாமல் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு அமர்ந்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கொரோனா காலங்களில் நேரடி தேர்வு வைக்காமல் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும். 
மாணவிகள் கைது
தேர்வு எழுதுவதற்கு ஏற்றவாறு மதிப்பெண்களை வழங்க வேண்டும். வேண்டும் என்று மதிப்பெண்கள் குறைத்து வழங்கப்படுகின்றன. பாடப்புத்தகங்களில் இருக்கும் விடைகளை அப்படியே எழுத வேண்டுமென வற்புறுத்துகிறார்கள். ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் படித்துவிட்டு சொந்த நடையில் எழுதினால் தான் அவர்கள் அறிவுத்திறன் வளரும் எனக்கூறி 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ெதரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி மற்றும் திருமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவிகள் சமரசத்தை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Next Story