மாவட்ட செய்திகள்

ஊரப்பாக்கம் அருகே பிளம்பர் தீக்குளித்து தற்கொலை + "||" + Plumber commits suicide near Urapakkam

ஊரப்பாக்கம் அருகே பிளம்பர் தீக்குளித்து தற்கொலை

ஊரப்பாக்கம் அருகே பிளம்பர் தீக்குளித்து தற்கொலை
ஊரப்பாக்கம் அருகே பிளம்பர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள சின்ன அருங்கால் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). பிளம்பர். கடந்த 2 ஆண்டுகளாக சற்று மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருக்கும்போது திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.


பலி

இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி, தாயார் இருவரும் அவரது உடலில் உள்ள தீயை அணைக்க முயன்றனர். அப்போது அவரது தாயும், மனைவியும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பிளம்பர் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய், மனைவி இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காதலன் ஏற்காததால் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் தற்கொலை
கணவர், 2 மகள்களை உதறிவிட்டு ராமநாதபுரம் வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.
2. நடிகை தற்கொலை... காதலனுக்கு தொடர்பா? - பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளிவந்த உண்மை
நடிகை சவுஜன்யா, கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
3. திருநின்றவூரில் மூதாட்டி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவு
திருநின்றவூரில் காலில் காயம் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவதியடைந்த மூதாட்டி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.
4. மகள் காதல் திருமணம் செய்ததால் தாய், தந்தை தற்கொலை
மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தி அடைந்த தாய், தந்தை தற்கொலை செய்துகொண்டனர்.
5. உருக்கமான வீடியோ வெளியிட்டுவிட்டு தி.மு.க. நிர்வாகி தற்கொலை
சென்னை ராயப்பேட்டையில் தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு மனைவியும், அவரது குடும்பத்தினருமே காரணம் என உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.