நகை வியாபாரியிடம் ரூ.16 லட்சம் தங்கம் மோசடி
நகை வியாபாரியிடம் ரூ.16 லட்சம் தங்கம் மோசடி
கோவை
கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் நகை வியாபாரி கோபால். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவருக்கும் தங்க நகை வாங்கல், விற்பனை செய்வது குறித்து பழக்கம் இருந்து வந்தது.
இந்த நிலையில் முருகேஷ் கடந்த மாதம் 5-ந் தேதி கோபாலிடம் வந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கினார். பின்னர் அவர் அந்த தங்க நகைகளுக்கு உரிய பணத்தையோ, அந்த நகைகளையோ திருப்பி அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து கோபால் முருகேசிடம் பணம் அல்லது நகைகளை திருப்பி தரும்படி பலமுறை கேட்டு உள்ளார். ஆனால் அவர் அதனை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். நகையை திருப்பி கேட்ட கோபாலை, முருகேஷ் உள்பட6 பேர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோபால் கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் முருகேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் நகை வியாபாரி ஒருவர் ரூ.15 லட்சம் தங்கம் மோசடி குறித்த புகார் அளித்தார் என்பதும் குறிப்பிட தக்கது.
Related Tags :
Next Story