வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க குழாய் வசதி இல்லை


வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க குழாய் வசதி இல்லை
x
தினத்தந்தி 7 Sept 2021 11:00 PM IST (Updated: 7 Sept 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழிகளில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க குழாய் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

பொள்ளாச்சி

பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழிகளில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க குழாய் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

பாதாள சாக்கடை 

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் ரூ.170 கோடியே 22 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்த திட்டத்தின் கீழ் 7400 ஆள்இறங்கு குழிகளும், 18 கழிவு நீரேற்று நிலையங்களும், 3 கழிவு நீர்உந்து நிலையங்களும், 17.4 கி.மீ. தூரத்துக்கு நீர்உந்து குழாய்களும் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாட்டு சந்தை வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய மும் கட்டப்பட்டு வருகிறது. வீடுகளில் சேகரமாகி கழிவுநீர் ஆள் இறங்கு குழிகளுக்குள் வருவதற்கு குழாய் அமைக்க வேண்டும். அப்போது வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்க முடியும். 

தரமில்லாத பணிகள்

தற்போது வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் சில ஆள்இறங்கு குழிகளில் குழாய் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

 இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை திட்ட பணிகளில் சரியான திட்டமிடல் இல்லை. பெரும்பாலான ஆள்இறங்கு குழிகள் தரமான முறையில் அமைக்கப்படவில்லை. 

இணைப்பு கொடுக்க முடியவில்லை 

மேலும் வீடுகளில் இருந்து இணைப்பு கொடுக்க குழாய் வசதி கொடுக்கப்பட்ட ஆள்இறங்கு குழிகளில் குழாய்கள் தாழ்வாக இல்லை. மாறாக நேராக உள்ளதால் கழிவுநீர் திரும்பி வீடுகளுக்கே செல்ல வாய்ப்பு உள்ளது.

 இதுபோன்ற பிரச்சினை களால் பொதுமக்கள் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் திட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டதால் விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

எனவே குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் இந்த திட்டம் குறித்த முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

செலவு தொகை பிடித்தம்

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குடீநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த திட்டத்திற்கு நிதி மட்டும் பொள்ளாச்சி நகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆள்இறங்கு குழிகளில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க குழாய் வசதி இல்லாமல் உள்ளது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதை அவர்கள் சரிசெய்ய வில்லை என்றால், நகராட்சி மூலம் அந்த பணிகள் செய்யப்படும். அதற்கான செலவு தொகை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வழங்க வேண்டிய நிதியில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றனர்.

1 More update

Next Story