ஊராட்சிகளில் செவிலியர்கள் மூலம் கொரோனா தடுப்பூசி

தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து ஊராட்சி களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் செவிலியர்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி
தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து ஊராட்சி களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் செவிலியர்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா 2-வது அலையின் தாக்கத்திற்கு பிறகு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடையே அதிகமாக விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாக இருந்ததால் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கூட்டம் அலைமோதியது.
தற்போது கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதால் நகர்புறங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் தடுப்பூசி முகாம் நடத்தப் படுகிறது. இந்த நிலையில் ஊராட்சிகளில் நடைபெறும் முகாம் களில் போதிய பயிற்சி பெறாத நபர்களை கொண்டு தடுப்பூசி செலுத்துவதாக புகார் எழுந்தது.
‘தினத்தந்தி’யில் செய்தி
இதுகுறித்து கடந்த 4-ந்தேதி 'தினத்தந்தி'யில் செய்தி வெளி யானது. இதை தொடர்ந்து முறையான பயிற்சி பெற்ற செவிலியர் களை கொண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த திட்டம் வரவேற்கதக்கது.
ஆனால் பொள்ளாச்சி பகுதிகளில் செவிலியர் கள் பற்றாக்குறை காரணமாக பயிற்சி பெறாத நபர்களை கொண்டு தடுப்பூசி போடப்பட்டது. இதை சுட்டிக்காட்டி தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது.
உடனடி நடவடிக்கை
இதையடுத்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சிறப்பு முகாம்களில் செவிலியர்களை கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. எனவே மக்களின் கோரிக்கையை அறிந்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்.
மேலும் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பயிற்சி பெறாதவர்களை வைத்து தடுப்பூசி போடுவதை முற்றிலும் தவிர்த்து, செவிலியர்களை கொண்டே தடுப்பூசி போட வேண்டும். அத்துடன் காலியாக உள்ள செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






