பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற திமுக பிரமுகர் கைது
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தி.மு.க. பிரமுகர்
பொள்ளாச்சி அருகே உள்ள காசிபட்டிணத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் ஒப்பந்த தாரரும் ஆவார். இவர் பொள்ளாச்சி அருகே உள்ள நாட்டுக்கல் பாளையத்தில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிகளை செய்து வந்தார்.
அப்போது அந்தப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து, அங்கு தனியாக இருந்த 32 வயதான பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்.
கைது
இது குறித்து அந்த பெண் கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், கணவனை இழந்த அந்த பெண்ணிடம் காளியப்பன், கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காளியப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.
மன்னிப்பு கேட்டார்
ஏற்கனவே கடந்த 4 மாதத்திற்கு முன் கொள்ளுப்பாளையத்தில் ஒரு பெண்ணிடம் காளியப்பன் தவறாக நடக்க முயற்சி செய்து உள்ளார். இதுகுறித்து அந்த பெண் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றார்.
ஆனால் அவரிடம் இதுபோன்று மீண்டும் தவறுகள் செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டு காளியப்பன் எழுதிக் கொடுத்து உள்ளார். தற்போது மீண்டும் அதே தவறை செய்ததால் சிக்கிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story