காமராஜர் பல்கலைக்கழகம் சேவை வரி செலுத்துவது தொடர்பான நடவடிக்கை ரத்து
காமராஜர் பல்கலைக்கழகம் சேவை வரி செலுத்துவது தொடர்பான நடவடிக்கை ரத்து-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் சேவை வரி செலுத்த வேண்டுமென மத்திய கலால்வரி இணை ஆணையர் தரப்பில் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 30.5.2019 அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப் பட்டது.
இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார்.
அப்போது பல்கலைக்கழகம் தரப்பில், இது கல்வி வழங்கும் நிறுவனம். இணைவிப்பு கல்லூரிகளுக்கு தேர்வை மட்டுமே நடத்துகிறோம். இதற்காக சேவை வரி செலுத்த வேண்டியதில்லை என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பல்கலைக்கழகத்திற்கு சேவை வரி கேட்க முடியாது என்பதால், சேவை வரி செலுத்தக்கோரிய இணை ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story